அறநிலையத்துறையில் ஆண்டுக்கணக்கில் ஒரே இடத்தில் பணியை தடுக்க பணியாளர்களுக்கு பொது மாறுதல்: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில்களில்  பணியாற்றுபவர்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது விருப்பத்தின் பேரிலோ பணிமாறுதல் செய்யப்படுகின்றனர். ஆனால் திருக்கோயில் ஊழியர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இதுபோன்று ஒரே இடத்தில் பணிபுரிவதால் சில நேரங்களில் முறைகேடு நடப்பதாக ஆணையர் அலுவலகத்துக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இதனால், திருக்கோயில் ஊழியர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யலாம். கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களை பணி மாறுதல் செய்ய ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணியாளர்கள் பணி மாறுதல் தொடர்பாக வழிகாட்டி நெறிமுறையை வெளியிட அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமய நிறுவனங்களின் நிர்வாக நலன் கருதி ஒரே செயல் அலுவலர்கள் நிலையில் உள்ள சமய நிறுவனங்களின் பணியாளர்களை மற்ற சமய நிறுவனங்களுக்கு பணி மாறுதல் செய்திடும் வகையில் ஆணையருக்கு அதிகாரம் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்  விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருக்கோயில் பணியாளர்கள் பொது மாறுதல் செய்வது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே வழிகாட்டி நெறிமுறைகள் சேர்க்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தங்களது ஆலோசனைகளை டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: