நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மநீம பணிக்குழு நியமனம்: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா தலைமையில் மாநில தேர்தல் தலைமை பணிக் குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை அறிவிக்கிறேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் விவரம்: ஏ.ஜி.மெளரியா - துணைத் தலைவர் (கட்டமைப்பு).

ஆர்.தங்கவேலு - துணைத் தலைவர் (களப்பணி மற்றும் செயல்படுத்துதல்). பிரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர். சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு). செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் (ஊடகம், தகவல் தொடர்பு). சரத்பாபு ஏழுமலை - மாநிலச் செயலாளர் (தலைமையகம்). நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள், இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: