×

இனி அனைத்து மைதானங்களிலும் ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ புதிய ஐடியா

மும்பை: ஹோம் அட்வாண்டேஜ்களை குறைக்கும் வகையில் ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ புதிய விதிமுறையை கொண்டு வரவுள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரங்களை அறிவித்துவிட்டன. குறிப்பாக இந்த முறை லக்னோ மற்றும் அகமதாபாத் என 2 அணிகள் புதியதாக இணையவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் 2022 விதிமுறைகள் 2 புதிய அணிகளின் வருகையால் ஐபிஎல் போட்டி முறைகளில் பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வருகிறது.

போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆகவும், தொடரின் நாட்கள் 70 ஆகவும் மாற்றி பிசிசிஐ புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளன. அதன்படி வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மெகா ஏலத்தின் போது மேலும் சில அறிவிப்புகள் வரக்கூடும். இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு ஹோம் அட்வாண்டேஜ் இருப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு வாரியமும், தங்களுக்கென மைதானங்களை கட்டிக்கொள்ளவும், இருக்கின்ற மைதானத்தை நன்கு பராமரிக்கவும் பிசிசிஐ உத்தரவிட்டது.

இதற்கு பதிலளித்த சில மாநில வாரியங்கள், சரிவர போட்டிகள் ஏதும் நடைபெறுவது இல்லை என்பதால் எப்படி வருமானம் வரும், எப்படி மேம்படுத்துவது எனக்கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஐபிஎல் தொடரின் போது ஒவ்வொரு அணியும், லீக் சுற்றில் தலா 2 போட்டிகளை ஹோம் கிரவுண்டில் விளையாடாமல், பொதுவான மைதானத்தில் விளையாடினால், அந்த மைதானத்திற்கு வருமானம் கிடைக்கும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை 10 அணிகள் மோதுகின்றன. எனவே தலா 2 போட்டிகள் என்ற வீதம் மொத்தம் 20 போட்டிகள் வேறு மைதானங்களில் நடைபெற்று வருமானம் பெருகும்.

 ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், அசாம், கேரளா போன்ற கிரிக்கெட் வாரியங்களின் மைதானங்களில் போட்டிகள் ஏதும் நடைபெறுவதில்லை. எனவே அடுத்தாண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் அங்கும் நடைபெறும் எனத்தெரிகிறது. அனைத்து அணி நிர்வாகங்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டால், இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.



Tags : IPL ,BCCI , IPL matches now at all venues: BCCI New Idea
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா