ராமநாதபுரம் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் கீழத்தூவலில் காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மறு உடற்கூராய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆனைச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல்துறையினர் விசாரணையின் துன்புறுத்தப்பட்டதால் உயரிழந்தாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மணிகண்டனின் தாயார் ராமலெட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், காவல்துறையினர் தனது மகனைக் கடுமையாக தாக்கியதால் உயிரிழந்ததாகவும், மணிகண்டனின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மணிகண்டனின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். மறு உடற்கூராய்வு செய்தவுடன் உடலை பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் உறுதி வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத அளவிற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Related Stories: