ஆம்பூர் அருகே 2 பாம்புகள் மீட்பு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே வீட்டின் குளியலையறையில் புகுந்த நாகபாம்பு, விவசாய நிலத்தில் புகுந்த மலைபாம்பு ஆகியவை மீட்கப்பட்டது.

ஆம்பூர் அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்த எல்லம்மாள் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு நாகபாம்பு ஒன்று நுழைந்தது. குளியலறையில் நுழைந்த அந்த பாம்பை கண்ட அவரது குடும்பத்தினர் அலறி அடித்து ஓடி வந்தனர். உடனே அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் கொடிய விஷம் கொண்ட நாகபாம்பை மீட்டு அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

நேற்று மதியம் ஆம்பூர் அடுத்த காரப்பட்டு அடுத்த மத்தூர் கொல்லையை சேர்ந்த ஜவகர்லால் என்பவரது விவசாய நிலத்தில் சுமார் 7 அடி நீள மலைபாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது. அங்கு வந்த வனத்துறையினர் மலைபாம்பை பிடித்து அருகில் உள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர். அதேபோல், ஆம்பூர் தேவ் தெருவில் வசித்து வரும் சத்தியநாராயணன் என்பவரது வீட்டின் குளியலறையில் புகுந்த பாம்பை தீயணைப்பு படையினர் மீட்டு அருகிலுள்ள காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

Related Stories: