சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்க விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் : பீகார் முதல்வர்

பாட்னா : சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு வருவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி வருகின்றனர்.கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்சி/எஸ்டி பிரிவை தவிர, மற்ற பிரிவுகளுக்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை என்று கடந்த மாதம் ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

இதனிடையே தேசிய அளவிலும் மாநில அளவிலும் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை கொண்டு வருவதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். அதன் அடிப்படையில் மாநில அளவில் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளதாக கூறியுள்ள நிதிஷ் குமார், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், பீகார் அரசு அறிவிப்பை வெளியிடும் என்று நிதிஷ் குமார் கூறினார்.

Related Stories: