தமிழகம் முழுவதும் 150 இடங்களில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

சென்னை:பாபர் மசூதி இடிப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், ஒன்றிய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் நேற்று 150க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.

தூத்துக்குடியில் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரபிக் அகமது, சென்னையில் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கோவையிலும், நெல்லையில் அச.உமர் பாரூக், மதுரையில் அகமது நவவி, ெசன்னை மயிலாப்பூரில் மாநில செயலாளர் ரத்தினம், புதுக்கோட்டையில் அபுபக்கர் சித்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஏ.கே.கரீம் தலைமையில் விழுப்புரத்திலும், ராமநாதபுரத்தில் நஜ்மா பேகம், கடலூரில் மாநில பொருளாளர் அமீர் ஹம்சா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: