அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியதால் தெலுங்கு படத்திலிருந்து ஜாக்குலின் நீக்கம்

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். சுகேஷின் காதலியான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ஹரி ஹர வீரமல்லு படத்தை கிரிஷ் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் அவர் சிக்கியிருப்பதால் அவரை இந்த படத்திலிருந்து நீக்கியுள்ளனர். அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

Related Stories: