சட்டசபை குழு முன் ஆஜராக அவகாசம் வேண்டும்: கங்கனா கோரிக்கை

சென்னை: பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் டெல்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று வர்ணித்தார். இதனால் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாக கூறி டெல்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு இது குறித்து நேற்று (6ம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கங்கனாவுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ள கங்கனா, எனக்கு ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட தொழில் ரீதியான பொறுப்புகள் இருப்பதால் சட்டசபை குழு முன் ஆஜராக கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Related Stories:

More