×

புதுவையில் 6 மாதங்களுக்கு பின் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறப்பு: குட்டீஸ்கள் உற்சாகம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பல மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதற்கான கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின் திங்கட்கிழமையான இன்று 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் நடைபெற்றன. மற்ற வகுப்புகளான 2, 4, 6, 8 வகுப்புகளுக்கு நாளை வகுப்புகள் ஆரம்பமாகிறது. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் நடைபெற்ற நிலையில் இந்த கல்வியாண்டு முடிய இன்னும் குறுகிய மாதங்களே இருப்பதால் சனிக்கிழமையும் சேர்த்து ெமாத்தம் 6 நாட்கள் பள்ளிகளை இயக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் கைகள் சுத்தம் செய்யப்பட்டு சானிடைசர் தெளிக்கப்பட்டது.

அதன்பிறகு சமூக இடைவெளியுடன் வகுப்பறைகளில் மாணவ - மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த கல்வியாண்டில் 6 மாதங்களுக்குபின் இன்று வகுப்புகள் துவங்கியது. சவரி ராயலு நாயக்கர் அரசு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். மேலும் இதுவரை 9 முதல் பிளஸ் 2 வரை அரைநாள் வகுப்புகளே நடைபெற்ற நிலையில் இன்று முதல் பிளஸ்1, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழுநேரம் பள்ளிகள் இயங்கின.


Tags : Puduvayal , Opening of primary and secondary schools after 6 months in Puduvayal: Cuties are excited
× RELATED புதுவயலில் ரூ.5.40 கோடியில் கழிவுநீர்...