உட்கட்சி பூசல்?..: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு..!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மறுநாளான 8ம் தேதி காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் அன்று மாலையே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து , ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல், மற்றும் வேட்புமனு பரிசீலனையும் முடிந்துவிட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக உறுப்பினரான ஜெயச்சந்திரன் சார்பில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு இந்த முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது .

அதில் இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்த வழக்கு குறித்த மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், மனு தாக்கல் செய்யப்பட்டு பதிவு நடைமுறைகள் முழுமையாக முடிந்தால் வழக்கை விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி தெரிவித்தார்.

Related Stories: