முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்: சல்மான் கான் முடிவு

மும்பை: முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். சல்மான் கான் நடிப்பில் அந்திம் இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதுகுறித்து அவர் கூறியது: கடந்த பல வருடமாக எனது படத்தில் முத்தக்காட்சியோ, ஆபாச காட்சியோ இல்லாதபடி பார்த்துக்கொள்கிறேன். எனது படங்களை பார்க்க சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வருவதற்கு இதுதான் காரணம்.

இயக்குனர்கள் கதையை கூறும்போதே, இதுபோன்ற ஏதாவது காட்சி இருந்தால் அதை நீக்க சொல்லிவிடுவேன். காரணம், நானும் எனது படத்தை எனது பெற்றோர், எனது சகோதரர், சகோதரிகளுடன் பார்க்கிறேன். அவர்களின் குழந்தைகளுடனும் பார்க்கிறேன். அப்போது நான் சில காட்சிகளில் நெளியக்கூடாது என நினைக்கிறேன். குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களும் அதுபோலத்தான் எண்ணுவார்கள். எனவே நான் கவனமாக இருக்கிறேன். இவ்வாறு சல்மான் கான் கூறினார்.

Related Stories: