இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகல்

சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில்இருந்து நடிகை காஜல் அகர்வால் விலகியுள்ளார். கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இப்படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். பட்ஜெட் பிரச்னை காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஷங்கர் சென்றுவிட்டார். பிறகு இந்தியன் 2 பட நிறுவனம், ஷங்கர் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இதில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளார். மும்பை தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை கடந்த ஆண்டு காஜல் மணந்தார். தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் இந்தியன் 2 படத்தில் இருந்து விலகியுள்ளாராம். இப்போது அந்த வேடத்தில் தமன்னா நடிப்பார் என்று தகவல் பரவியுள்ளது.

Related Stories: