ராஜஸ்தானில் அமித்ஷா சூளுரை கவிழ்க்க மாட்டோம் ஆட்சியை பிடிப்போம்

ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; 2023ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம்,’ என அமித்ஷா சூளுரைத்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. பிற மாநிலங்களைப் போல இங்கும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ பல்வேறு முயற்சிகளை செய்வதாக சமீபத்தில் கெலாட் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ராஜஸ்தான் வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெய்ப்பூரில் நேற்று கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என பயப்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்கப் போவது யார்? பாஜ நிச்சயம் உங்கள் ஆட்சியை கவிழ்க்காது. மக்கள் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். வரும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 3ல் 2 பங்கு வாக்குகளை பெற்று பாஜ தலைமையில் ஆட்சி அமையும்,’’ என்றார்.

Related Stories: