சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்தவருக்கு கொரோனா தொற்று: சளி மாதிரி ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

அவனியாபுரம்: மதுரை விமானநிலையத்திற்கு நேற்று காலை  இலங்கையிலிருந்து 151 பயணிகள் வந்தனர். இவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர், சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்துள்ளார். இவருடன் வந்த அவரது மனைவி, மகனுக்கு பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இதையடுத்து தொற்று பாதித்தவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சளி மாதிரி ஒமிக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவருடன் வந்த பயணிகள் 15 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: