குடியிருப்புகளை கட்டும்போது ரூ.1.5 லட்சம் வசூலிக்கும் அதிமுக அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வாழ்வுரிமையை வலியுறுத்தி மத்திய சென்னையில் புளியந்தோப்பு கே.பி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, தேனாம்பேட்டை, அயனாவரம், டிபி  சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, துறைமுகம் உள்ளிட்ட 6 இடங்களில் நேற்று கிளர்ச்சி பிரசாரம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் கூறுகையில்,  ‘‘பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்து புதிதாக கட்டப்படும் போது குடியிருக்கும் மக்களிடமிருந்து ஒன்றரை லட்சம் வசூலிக்கப்படுகிறது. இது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை. இதனை ரத்து செய்ய வேண்டும். சாலையோரம் மற்றும் பிற பகுதியில் உள்ள மக்களை சென்னைக்கு வெளியே அனுப்பாமல் இங்கேயே அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: