சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு

சென்னை: மழை நின்றதால் நீர்வரத்து குறைந்ததையடுத்து, சென்னை குடிநீர் ஏரிகளில் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் மழை காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகள் நிரம்பின. இதனால், 5 ஏரிகளில் இருந்து கடந்த 7ம் தேதி முதல் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஏரிகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: