பூஜை நடத்துவதாக கூறி 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி: போக்சோ சட்டத்தில் கைது

மார்த்தாண்டம்: பூஜை நடத்துவதாக கூறி 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மணலோடை பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). இவர் காளி சிலை வைத்து பூஜை செய்வார். மாந்தீரிகமும் செய்வதால் இவரிடம் பூஜைக்காக ஏராளமானவர்கள் வருவது உண்டு. அவர்களிடம் வீட்டில் பில்லி சூனியம், செய்வினை கோளாறுகள் உள்ளன என்றெல்லாம் கூறி, தங்க வைத்து பூஜைகள் நடத்துவது வழக்கம். இவரிடம் மார்த்தாண்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவரும் பூஜைக்காக சென்றார். இந்த தொழிலாளிக்கு மனைவி இல்லை. 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் 10ம் வகுப்பும், 2 வது மகள் 7ம் வகுப்பும் படிக்கிறார்கள். இதில் 2வது மகளுக்கு உடல் நல பிரச்சினை இருந்ததால், பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகாத நிலையில், உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் மந்திரவாதி சேகரை சந்திக்க சென்றார். அப்போது அவர் 2, 3 நாட்கள் பூஜை செய்து எண்ணெய் தடவினார். இதில் 2வது மகளுக்கு உடலில் இருந்த அரிப்பு பிரச்சினை மெல்ல, மெல்ல சரியானது. தொழிலாளியுடன் 10ம் வகுப்பு படிக்கும் அவரது மூத்த மகளும் செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒரு நாள் திடீரென மந்திரவாதி சேகர், உங்கள் குடும்பத்தில் செய்வினை கோளாறு அதிகரித்து விட்டது.

பூஜை செய்ய தொடங்கியதும், வேகம் கூடி விட்டது. எனவே 2, 3 நாட்கள் எனது இல்லத்தில் தங்கி இருந்து விடிய, விடிய பூஜை செய்ய வேண்டும். இரு மகள்கள் மட்டும் இருந்தால் போதும் என்றார். மந்திரவாதி சேகரின் மனைவியும் உடன் இருந்து, பூஜை செய்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும். உங்கள் மகள்களுடன் நான் உடன் இருந்து கவனித்துக் கொள்கிறேன் என்றார். இதை நம்பி தொழிலாளியும் தங்கி இருந்து பூஜை வைக்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி பூஜைக்காக தங்கி இருந்த 10ம் வகுப்பு மாணவியை, சம்பவத்தன்று தனியாக அழைத்த மந்திரவாதி சேகர், உன் குடும்பம் நன்றாக இருக்க நான் உதவி செய்கிறேன். நான் கூறியபடி நீ கேட்க வேண்டும்.

அப்படி இல்லா விட்டால் உன் குடும்பத்தை பூஜை வைத்து அழித்து விடுவேன் என மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி வெளியே கூற கூடாது என்றும் தெரிவித்தார். இதனால் மாணவியும் வெளியே கூறவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவியின் உடல் நிலையில் மாற்றம் அடைந்தது. திடீரென வயிறு வலிப்பதாக கூறியதால், அவரது தந்தை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனையில் மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மாணவியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கும் கர்ப்பமாக இருந்தது உறுதியானதால், 1098 சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை அழைத்து நடந்த விசாரணையில், மந்திரவாதி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. உடனடியாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, மந்திரவாதி சேகரை நேற்று போலீசார் கைது செய்தனர். மாணவிக்கும், மந்திவாதிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. தற்போது 7 மாதம் வரை ஆகி விட்டதால், கருவை கலைக்க முடியாத நிலை உள்ளது என்றும் டாக்டர்கள் கூறி உள்ளனர்.

பூஜைக்காக தங்கி இருந்த 10ம் வகுப்பு மாணவியை, சம்பவத்தன்று தனியாக அழைத்த மந்திரவாதி சேகர், உன் குடும்பம் நன்றாக இருக்க நான் உதவி செய்கிறேன். நான் கூறியபடி நீ கேட்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் உன் குடும்பத்தை பூஜை வைத்து அழித்து விடுவேன் என மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

Related Stories: