ஆம்பூர் ஊட்டல் தேவஸ்தானத்தில் மேம்பாட்டு பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டாளம் ஊராட்சி அருகே பழமையான ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது. பல மாநிலத்தவர் இங்கு வழிபாடு செய்தும், புண்ணிய சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி நோய் தீர்க்க வருகின்றனர். இந்நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் உட்பட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து நேற்று எம்எல்ஏ வில்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன், மாதனூர் பிடிஓ துரை, பொறியாளர் தங்கம், ஊராட்சி தலைவர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: