கூத்தன்குழி-நாகர்கோவிலுக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவை; சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்

ராதாபுரம்:  நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் புதிதாக அமைக்கப்பட்ட ஏடிஎம், ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு, ஞானதிரவியம் எம்பி திறந்து வைத்தனர். பின்னர் கூத்தன்குழியில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை துவக்கிவைத்தனர். இதே போல் அம்பலவாணபுரம் முதல் கூத்தன்குழி - ஆவுடையாள்புரம், தோமையார்புரம்-காமனேரி, குறிஞ்சிகுளம்- தாமஸ்மண்டபம், கூடங்குளம்- செட்டிகுளம் ரோம் அஞ்சுகிராமம்- கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கும், அம்பலவாணபுரம்- ஆவரைகுளம் பிள்ளையார்குடியிருப்பு- சிதம்பராபுரம்- யாக்கோபுரம்- சங்கனாபுரம் தெற்கு கருங்குளம்- அஞ்சுகிராமம் நாகர்கோவில், பழவூர் முதல் நாகர்கோவில் புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை சபாநாயகர் அப்பாவு ஞானதிரவியம் எம்பி துவக்கிவைத்தனர்.

நிகழ்ச்சிகளில் நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், வள்ளியூர் யூனியன் ேசர்மன் சேவியர் செல்வராஜா, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, செயலாளர் பெல்சி, மதிமுக ஒன்றியச் செயலாளர் சங்கர், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் சுப்பையா, திமுக ராதாபுரம் நகரச் செயலாளர்  கோவிந்தன், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் பொன் மீனாட்சி அரவிந்தன், ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் கும்பாபிஷேக கமிட்டி செயலாளர் அரவிந்தன், சிதம்பரபுரம் பஞ்சாயத்து தலைவர் பேபி முருகன்,களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: