குற்றாலத்தில் சிவபத்மநாதன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

தென்காசி:  குற்றாலத்தில் காசிமேஜர்புரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தென்காசி மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். காசிமேஜர்புரம் ஊராட்சி தலைவர் குத்தாலம் இசக்கி பாண்டியன் ஏற்பாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இதையடுத்து அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்று உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றியச் செயலாளர் குத்துக்கல்வலசை அழகுசுந்தரம், குற்றாலம் இசக்கிபாண்டியன், வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் வேலுச்சாமி, வக்கீல் குமார் பாண்டியன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் குற்றாலம் குட்டி, ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா சரவணன், குத்துக்கல்வலசை காசி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: