×

கே.கே.நகர், தண்டையார்பேட்டையில் மின் குறைதீர் கூட்டம்

சென்னை: கே.கே.நகர், தண்டையார் பேட்டை கோட்டங்களில் நாளை மறுதினம் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடைபெறுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே.கே.நகர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (7ம் தேதி) காலை 11 மணிக்கு கே.கே நகர் செயற்பொறியாளர் அலுவலகம்,  2வது தளம் 110 கி.வோ, கே.கே நகர் துணைமின் நிலைய வளாகம், கே.கே நகர், சென்னை-78 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தண்டையார்பேட்டை கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 7ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறியாளர்/ இ&ப/ தண்டையார்பேட்டை அலுவலகம், எண். 805,  டி.எச்.ரோடு, மணிகூண்டு எதிரில், தண்டையார்பேட்டை, சென்னை-21  என்ற முகவரியில் நடைபெற உள்ளது.    இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags : KK Nagar ,Thandayarpettai , KK Nagar, Thandayarpet, Electricity Board Meeting
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!