×

தடுப்பூசி போடாவிட்டால் ஆசிரியர்கள் சம்பளம் இல்லாமல் லீவு எடுக்கலாம்; கேரள கல்வி அமைச்சர் அதிரடி.!

திருவனந்தபுரம்: கேரளாவில் 1707 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை. ஊசி போடாதவர்கள் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சமீபத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் அமைச்சர் சிவன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்தனர். இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போடும் ஆசிரியர்கள் எண்ணிக்ைக தற்போது அதிகரித்துள்ளது. நேற்று வரை உள்ள கணக்கின்படி 1707 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போடவில்ைல. இதில் 1066 பேர் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆவர். மலப்புரம் மாவட்டத்தில் தான் 201 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை.

5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போடவில்லை என்று அறிந்த பெற்ேறார் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே குழந்தைகள் நலனுக்காக ஆசிரியர்கள் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது. எனவே உடல் பிரச்னை உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை ஆஜர்படுத்த வேண்டும். தடுப்பூசி போடாவிட்டால் வாரம் தோறும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்து கொள்ளலாம்.

Tags : Teachers can take unpaid leave if not vaccinated; Kerala Education Minister in action.!
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...