அதிமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு..ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டு நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இன்று கூட்டாக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் விருப்பமனு அளித்தனர்.

விருப்பமனு அளிப்பதற்கான அவகாசம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், மனுக்களை பரிசீலித்து எத்தனை பேர் விருப்ப மனு அளித்தனர் என்ற விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய சூழலில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியை தவிர மற்ற யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் அளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.

Related Stories: