×

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை

மும்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்து. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்களும், அக்சர் பட்டேல் 52 ரன்களும் எடுத்தனர். இதில் நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா அணி வீரர் அணில் கும்ப்ளே, இங்கிலாந்து வீரர் ஜிம்லேக்கர் ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலும் இணைந்துள்ளார். மேலும் இவர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Zealand ,Ajaz Patel ,India , New Zealand's Ajaz Patel takes 10 wickets in 2nd Test against India
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா