ஜாவத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

டெல்லி: ஜாவத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களும், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜாவத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

* சென்னை சென்ட்ரல் - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (12840 ) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரம்  - ஜஸிதிஹ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (12375 ) இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ஹவுரா - சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் (12339 ) சேவையும் புயல் காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

* விழுப்புரம் - புருலியா வாரம் இருமுறை விரைவு ரயில் (22606) சேவையும் இன்று ரத்து செய்யப்படுகிறது.

நாளை 2 விரைவு ரயில்கள் ரத்து:

* சென்னை சென்ட்ரல் - ஹவுரா கொரமண்டல் விரைவு ரயில் (12842 ) நாளை ரத்து செய்யப்படுகிறது.

* புரி - சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22859) நாளை ரத்து செய்யப்படுகிறது.

Related Stories: