தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை பெய்யும் என கூறியுள்ளது. இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories: