நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக-பாஜ கூட்டணி தொடரும்: சேலத்தில் அண்ணாமலை பேட்டி

சேலம்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். அதில் எந்த வித குழப்பமும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் முறையான பேச்சுவார்த்தை அமையாததால் ஆங்காங்கே பாஜவினர் தனித்து போட்டியிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை பெரிதாக பார்க்கக் கூடாது. தற்போது கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கியிருக்கிறோம். தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும். பாஜ நிர்வாகி கே.டி.ராகவன் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை இன்னும் வரவில்லை. வந்ததும் அது பற்றி கருத்து சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: