×

கொக்கிலமேடு கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் உயிருடன் டால்பின் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் சுற்று வட்டார மீனவ குப்பங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டால்பின் உள்பட அரிய வகை மீன்கள் உயிருடனும், இறந்தும் கரை ஒதுங்குவது வழக்கம். அந்த நேரத்தில், அருகில் உள்ள மீனவர் உயிருடன் கரை ஒதுங்கும் டால்பினை மீண்டும் கடலில் விட்டு விடுவார்கள். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு மீனவர் குப்பத்தில் நேற்று 6 அடி உயரம் சுமார் 150 கிலோ எடை கொண்ட டால்பின் உயிருடன் கரை ஒதுங்கியது. இதனை பார்த்ததும், அருகில் இருந்த மீனவர்கள் ஓடி வந்து, அந்த டால்பினை மீட்டு ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

Tags : Kokkilamedu beach , Dolphin stranded alive on Kokkilamedu beach
× RELATED கொக்கிலமேடு கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்