கூவம் ஆற்றில் குளித்தவர் பலி

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள கூவம் நதிக் கரை பகுதியை சேர்ந்தவர் வெள்ளைக்காரன்(45). இவர் கூவம் நதி கரையை ஒட்டியுள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை கூவத்தில் அதிகளவில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அதில், அவர் குளிக்க சென்றபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் ஆற்றில்  தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று கூவம் நதிக்கரையின் ஓரம் இருந்த முட்புதரில் சிக்கி வெள்ளைக்காரன் இறந்த நிலையில் சடலமாக மீட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: