×

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பூந்தமல்லி எம்எல்ஏ ஆய்வு: தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற உடனடி நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி மழை நீர் சூழந்த எம்எம்ஏ சாலை, ரயில் நகர், அரசு குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில் ரயில் நகர் பகுதியில் மழை பெய்தால் தண்ணீர் புகுந்து விடுகிறது. எங்களுக்கு சரியான சாலை வசதியும் கிடையாது. மேலும், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றோம். இதேபோல், அரசு குடியிருப்பு வளாகத்தில் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். தற்போதைய நிலையில் மழை பெய்துள்ளதால் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சேரும், சகதியுமாக உள்ளது.

அதனால், ஒவ்வொரு தெருவிலும் சாலை வசதி மற்றும் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றும் பெண்கள் திரண்டு வந்து புகார் கூறி எம்எல்ஏ விடம் மனு கொடுத்து வலியுறுத்தினர். தற்போது மழை பெய்து வருவதால் சேரும், சகதியுமாக உள்ளது. இதனால் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மழை விட்டதும் சாலை மற்றும் கால்வாய் வசதி செய்து தருவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தா.எத்திராஜ், எஸ்.பரமேஸ்வரன், ஏ.தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Poonamallee , Poonamallee MLA inspects rain-affected areas: Immediate action to remove stagnant water
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...