அம்பேத்கர் பல்கலை. சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் நியமனம்

புதுடெல்லி: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக, தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜாவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதற்கான ஆணையை பல்கலைக் கழக பதிவாளர் நேற்று வழங்கினார். வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்தவர். கடந்த 2012 முதல் டெல்லியில்  வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்படி நியமிக்க படுகிறார்கள் என்பது குறித்துஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Related Stories: