உடல்நிலை சரியில்லை மன்மோகன் சிங்குக்கு தொடர் முழுவதும் லீவ்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எம்பி.யாக இருக்கிறார். சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்றார். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனால், தனக்கு விடுப்பு அளிக்கும்படியும் மாநிலங்களவை தலைவர் வெங்கையாவுக்கு கடிதம் எழுதினார். இதை ஏற்றுக் கொண்டுள்ள வெங்கையா, இந்த தொடர் முழுவதும் அவருக்கு விடுப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Related Stories: