குறைந்தது கொரோனா: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த ஏற்பாடு...பூர்வாங்க பணிகள் விறுவிறு..!!

சென்னை: புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக சட்டப்பேரவை நிகழ்வுகள் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்று வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை, நிதிநிலை கூட்டத்தொடர், மானிய கோரிக்கை மீதான விவாதம் வரை கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பேரவை நிகழ்வுகளை மீண்டும் பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க இருக்கும் நிலையில், காகிதமில்லா முறையில் கூட்டத்தொடரை நடத்துவதற்காக  சட்டப்பேரவையில் கணினிகள் பெருத்துவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Related Stories: