மார்த்தாண்டம் சாலையை சீரமைத்த போலீசார்

மார்த்தாண்டம்: களியக்காவிளையில் இருந்து குழித்துறை,  மார்த்தாண்டம் வழியாக நாகர்கோவில் செல்லும்  தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.  சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த சாலை  குண்டு குழிகளாக காணப்படுகிறது.  அனைத்து பகுதிகளுமே மோசமாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.இந்த சாலையை  முழுமையாக தார் போட்டு  சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இந்த நிலையில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் தங்கராஜ்  மற்றும் போலீசார் மார்த்தாண்டம்  மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள குண்டு குழிகளில் மண்ணும் ஜல்லியும் போட்டு சீரமைத்தனர்.இதேபோல் குழித்துறை பகுதியில்   தேசிய நெடுஞ்சாலையில் மண் போட்டு நிரப்பப்பட்டது. இதனால் இந்த தடத்தில் தினசரி வாகனங்களை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்தனர்

Related Stories: