×

அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு தடுப்பூசி கட்டாயமாக்குவது குறித்து ஆய்வு செய்க : ராமதாஸ் அட்வைஸ்

சென்னை : அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் குறைந்து வருவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல!

ஓமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்! பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : தடுப்பூசி
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...