×

பரமக்குடி வைகையாற்றில் விநாடிக்கு 4,000 கனஅடி நீர்வரத்து: பரமக்குடி - எமனேஸ்வரம் தரைப்பாலம் மூழ்கியது

ராமநாதபுரம்: வைகை ஆற்றில் 4,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி - எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலம் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மூழ்கியுள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து சுமார் 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்தீபனூர் மதகு அணையின் வலது, இடது பிரதான கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது போக சுமார் 4,000 கனஅடி தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி செல்கிறது. இந்த தண்ணீர் இன்று பரமக்குடி வந்தடைந்தது. வைகை ஆற்றில் 4,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் ஒரே வாரத்தில் 2வது முறையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் ஒரு வாரமாக பரமக்குடி - எமனேஸ்வரம் இடையிலான தரைப்பாலம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல் துறையினர் கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Paramakudi Vaigai ,Paramakudi ,Emaneswaram , vaigai, ramanadhapuram
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...