×

ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

புவனேஸ்வர்: ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை அரையிறுதியில் விளையாட இந்தியா தகுதி பெற்றது. 4வது காலிறுதியில் நேற்று பெல்ஜியம் அணியை எதிர்கொண்ட இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் எஸ்.என்.திவாரி அபாரமாக கோல் அடித்து அசத்தினார். முன்னதாக நடந்த முதல் காலிறுதியில் ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் மோதின. இப்போட்டி  2-2 என டிராவில்  முடிந்ததை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது.

அதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 2வது காலிறுதியில் நெதர்லாந்து - அர்ஜென்டினா அணிகள் களம் கண்டன. அதில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 3வது காலிறுதியில்  பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை பந்தாடியது.  நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - ஜெர்மனி, பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் டிச.5ம் தேதி நடக்க உள்ளது.

Tags : Junior Hockey World Cup ,India , Junior Hockey World Cup: India advanced to the semi-finals
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!