பாமக புதிய மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் அறிமுகம் கூட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு வழங்குதல் நிகழ்ச்சி திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. பாமக நிர்வாகி கார்த்திக் பொன்னுசாமி வரவேற்றார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமகவின் புதிய மாவட்ட செயலாளர் தினேஷை அறிமுகம் செய்துவைத்தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாமக நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது.

தொடர்ந்து, புதிய மாவட்ட செயலாளர் தினேஷ் பேசுகையில், பாமக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதிகளுக்கு தலா 2 இடங்களில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, ஆகியவற்றை ஒற்றுமையுடன் நாம் செயலாற்றி கைப்பற்ற வேண்டும் என்றார். இதில் நிர்வாகிகள் திருவேங்கடம், மேத்தா, அஜய், பெருமாள், சண்முகம், சங்கர், மற்றும் பிச்சாண்டி உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: