திருச்சியில் ஆடு திருடர்களால் படுகொலை சிறப்பு எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ5.5 லட்சம் நிவாரண நிதி: திருவள்ளூர் காவல்துறையினர் வழங்கினர்

திருவள்ளுர்: ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி நாவல்பட்டு சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்துக்கு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் ரூ5 லட்சத்து 50 ஆயிரம்  நிதி உதவி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம், நாவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 21 ந் தேதி இரவு பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஆடு திருடர்களை விரட்டி சென்றபோது, அவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தின் நிலையை உணர்ந்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் ஆலோசனையின்பேரில், ரூ5 லட்சத்து 50 ஆயிரத்து 600 நிதி திரட்டப்பட்டது. இதை தொடர்ந்து பொன்னேரி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகிதா ஆணி கிறிஸ்டி, திருச்சி நாவல்பட்டில் உள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வீட்டுக்கு நேரடியாக சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது மனைவி மற்றும் மகனிடம் ரூ5 லட்சத்து 50 ஆயிரத்து 600 நிதி உதவியினை வழங்கினார்.

Related Stories:

More