அன்வர் ராஜா மீது நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் அதிமுகவில் புற்றீசல்போல் எல்லோரும் பேச ஆரம்பிச்சிடுவாங்க...: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: அன்வர்ராஜா மீது சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் கட்சியில் புற்றீசல்போல் எல்லோரும் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் நேற்று அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: அன்வர்ராஜாகட்சியில் இருந்து கொண்டு கட்சியை விமர்சனம் செய்வது, கட்சி கூட்டங்களிலே, அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை வெளியில் தெரிவிப்பது நல்லதல்ல. இந்த போக்கை நாம் அனுமதித்தால், கட்சியில் புற்றீசல்போல எல்லோரும் பேச ஆரம்பிப்பார்கள். கட்டுப்பாடு இல்லாமல் போகும். எனவே அன்வர்ராஜா மீது எடுத்த நடவடிக்கை சரியான நேரத்தில், உரிய காலத்தில் எடுத்த சரியான நடவடிக்கை ஆகும். இதுபோன்ற நடவடிக்கையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆள் ஆளுக்கு விமர்சனம் செய்துகொண்டிருப்பார்கள். அனைவரும் ஒற்றுமையோடு இருக்கும்போது ஒருசிலர் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டால் கட்சி எப்படி அதனை வேடிக்கை பார்க்கும். எனவே கட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: