சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

சென்னை: பாலியல் தொல்லை வழக்கில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ஜூன் 16ம் தேதி டெல்லியில் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையில் சூழ்நிலை மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறி சிவசங்கர் பாபாவின் 2வது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: