பார்வை இழந்த சிறுவனின் சிகிச்சைக்கு திமுக எம்எல்ஏ ஒரு மாத சம்பளம் வழங்கினார்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளைப்பள்ளம் துர்க்கை அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிறுவன் சந்தோஷ். சிறுவன் சந்தோஷ் அண்மையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தன்னுடைய கண் பார்வையை இழந்தார். இந்த நிலையில் அவரின் மருத்துவ உயர் சிகிச்சைக்கு விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, தனது ஒரு மாதம் சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்தை வழங்கி சிறுவன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மேலும், திமுக எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, ”விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுகவினருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் கேட்டுக் கொண்டுள்ளார். தயவுகூர்ந்து யாரும் பண்டிகை காலங்களில் தவிர்த்து எஞ்சிய நாட்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். குறிப்பாக நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம்” என்றார்.

Related Stories:

More