×

ஐபிஎல் பொது ஏலத்திற்கு அதிகபட்சமாக 72 கோடியை தக்க வைத்துள்ள பஞ்சாப்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் வசம் 68 கோடி

மும்பை: 15வது ஐபிஎல் தொடர் ஏப்.2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இதனால் மொத்த அணிகள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக அணிகள் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியலை  ஒப்படைப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. அதன்படி சென்னைசூப்பர் கிங்ஸ் ஜடேஜா, டோனி, ருதுராஜ், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதில் டோனியை விட (12கோடி) விட ஜடேஜாவை அதிக தொகைக்கு (16 கோடி) தக்க வைத்துள்ளது. மும்பை ரோகித்சர்மா, பும்ரா, சூர்யகுமார், பொல்லார்ட்டையும், டெல்லி ரிஷப் பன்ட், அக்சர் பட்டேல், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, கொல்கத்தா ரஸ்சர், வருண்சக்ரவர்த்தி, வெங்கடேஷ், நரேன், ராஜஸ்தான் சாம்சன்,பட்லர், ஜெய்ஸ்வால், பெங்களுரு கோஹ்லி, மேக்ஸ்வெல், சிராஜ், ஐதராபாத் வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரன்மாலிக்,பஞ்சாப் மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங்ஆகியோரையும் தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் அணி அதிகபட்சமாக பொது ஏலத்திற்கு ரூ.72 கோடியை மீதம் வைத்துள்ளது. ஐதராபாத் 68 கோடி, ராஜஸ்தான் 62 கோடி, பெங்களூரு ரூ.57 கோடியை மீதம் வைத்துள்ளன. இந்த தொகையில் பொது ஏலத்தில் வீரர்களை எடுக்க முடியும்.  புதிதாக இணைந்துள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் ஏலத்திற்கு முன்பாக 4 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் லக்னோ கே.எல்.ராகுலை ரூ.20கோடிக்கும், ரஷித்கானை ரூ.16 கோடிக்கும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில வீரர்களுடன் இருஅணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
பொது ஏலத்திற்கு முன்பாக 8அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்துள்ளன.  ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் ஊதிய தொகை வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா ரூ. 16 கோடி, டோனி - ரூ. 12 கோடி, மொயீன் அலி  ரூ. 8 கோடி ருதுராஜ் கெய்க்வாட் ரூ. 6 கோடி

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா   16 கோடி, பும்ரா -  12 கோடி, சூர்யகுமார் யாதவ்  8 கோடி பொலார்ட் 6 கோடி,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: கோஹ்லி 15 கோடி, மேக்ஸ்வெல் 11 கோடி, சிராஜ்  7 கோடி.

டெல்லி கேபிடல்ஸ்: ரிஷப் பன்ட் 16 கோடி, அக்சர் படேல் 9 கோடி, பிரித்வி ஷா 7.50 கோடி நார்ட்ஜே 6.50 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஸல் 12 கோடி,வருண் சக்ரவர்த்தி 8 கோடி,வெங்கடேஷ் ஐயர் 8 கோடி, நரைன் - ரூ. 6 கோடி

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் 12 கோடி, அர்ஷ்தீப் சிங் - ரூ. 4 கோடி

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன்  14 கோடி, அப்துல் சமத் 4 கோடி உம்ரான் மாலிக் 4 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் 14 கோடி, பட்லர் - ரூ. 10 கோடி, ஜெய்ஸ்வால் 4 கோடி

20 லட்சத்தில் இருந்து 8 கோடி வெங்கடேசுக்கு அதிர்ஷ்டம்
கடந்த முறை கேகேஆர் அணிக்காக அடிப்படை தொகையான ரூ.20லட்சத்திற்கு எடுக்கப்பட்ட  வெங்கடேஷ் அய்யர் இந்தமுறை 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இதுகடந்த முறையை விட 40 மடங்கு அதிகமாகும். இதேபோல் சிஎஸ்கேவில் ருதுராஜ் 40லட்சத்தில் இருந்து 6 கோடிக்கும், ஐதராபாத் அணியில் உம்ரன் மாலிக் ரூ.10லட்சத்தில் இருந்து ரூ. 4 கோடிக்கும், அப்துல் சமத் ரூ.20லட்சத்தில் இருந்து 4கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேஎல்.ராகுல் வெளியேறியது ஏமாற்றம்: அனில் கும்ப்ளே பேட்டி
கடந்த 2 சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் கடந்த சீசனில் அதிக ரன்குவித்து அசத்தினார். ஆனால் அவரை பஞ்சாப் அணியால் தக்க வைக்க முடியவில்லை. லக்னோ அணி அவருக்கு ரூ.20 கோடி வழங்கி இழுத்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறுகையில், கேஎல் ராகுலை தக்க வைக்க முடியாமல் போனது ஏமாற்றம். நாங்கள் முயற்சித்தோம் ஆனால் அவர் ஏலத்திற்கு செல்ல விரும்பினார், என்றார். சிஎஸ்கேவில் ரூ.16 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா கூறுகையில், ‘சிஎஸ்கே அணி தக்கவைத்ததில் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சியும் அளிக்கிறது. மீண்டும் ஒருமுறை நன்றாக செயல்படுவோம், என்றார்.

Tags : Punjab ,IPL ,Sunrisers Hyderabad , IPL, Public Auction
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...