அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் இருந்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-யை நீக்கக்கோரி புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு

சென்னை: ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பழனிசாமியையும் நீக்கக்கோரி புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுக சட்ட விதிகளில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இணைந்து கொண்டு வந்த திருத்தங்கள் செல்லாது என அறிவிக்க கோரி மனு அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் ரூ.20 கோடிக்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் அளிக்காமல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது விதிமீறல் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர்களை முடிவு செய்யக்கூடிய ஆட்சி மன்ற குழு கூட்டத்தை கூட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: