கடந்த 10 ஆண்டுகளில் 1,160 யானைகள் படுகொலை: ஆர்.டி.ஐ.யில் அதிர்ச்சி தகவல்

சென்னை: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரயில்கள் மோதியதில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் 741, வேட்டையாடியதில் 169, விஷம் வைத்து 33 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்தியா முழுவதும் 29,964 யானைகள் உள்ளதாக தெரியவந்தது.

Related Stories: