கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் கனமழை மலைச்சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு மலைச்சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துவங்கிய கனமழை நேற்று காலை வரை தொடர்ந்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், கொடைக்கானல் - அட்டுவம்பட்டி பிரிவு அருகே மலைச்சாலையின் குறுக்கே பெரிய மரம் விழுந்தது. இதேபோல் கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் பெருமாள்மலையை அடுத்த ஆனைகிரிசோலை பகுதியில் ராட்சத மரம் விழுந்தது.

இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர் மலைச்சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மண்சரிவு அல்லது மரங்கள் வேருடன் சாய வாய்ப்பு உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே மழை நேரங்களில் மலைச்சாலைகளில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பயணத்தை தவிர்க்கும் படி கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: