×

'நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுகிறது': திருச்சி சிவா குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.  டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முடித்து வைக்கப்பட்ட கடந்த கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுகளுக்கு இப்போது நடவடிக்கை எடுக்க முடியாது என்றார். மாநிலங்களவையில் பிரதான எதிர்க்கட்சியின் தலைவருக்கு கூட பேச அனுமதி மறுக்கப்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

எதை ஒளிபரப்புவது என்பதை இவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள்? என்றும் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். இதனால் எதிர்க்கட்சிகளின் நியாயமான குரல் கூட மக்களை சென்றடையவிடாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். பெகாஸஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என எந்த முக்கிய பிரச்சனைகளையும் விவாதிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் திருச்சி சிவா புகார் தெரிவித்தார்.


Tags : Parliament ,Trichy Siva , “Members of Parliament, Opposition, Trichy Siva
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...