திருவில்லி கோயிலுக்குள் புகுந்த மழைநீர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வைத்யநாதசுவாமி கோயில். இந்நிலையில் நகரில் கடந்த 2 தினங்களாக பெய்த மழையினால் இக்கோயில் பிராகரங்களில் மழைநீர் தேங்கி நின்றது இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.

இதையடுத்து கோயில் தக்கார் இளங்கோவன்,  நிர்வாக அதிகாரி ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று ஊழியர்கள் கோயில் பிரகாரத்தில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். எதிர்காலத்தில் கோயில் பிரகாரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: