டெல்லியில் பெண் மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்!: சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை..!!

டெல்லி: டெல்லியில் அடையாளம் தெரியாத நபர்களால் பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நவம்பர் 19ம் தேதியன்று டெல்லியில் உள்ள ஷாலிமார் பாக் என்ற பகுதியில் நள்ளிரவில் காரில் இருந்து இறங்கிய பெண்களில் ஒருவரை சூழ்ந்துக்கொண்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர். இந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி டெல்லி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மர்மநபர்களின் தாக்குதல் குறித்து காவல்துறையில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், ஷாலிமார் பாக் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளின் அடிப்படையில் பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: